புதன், பிப்ரவரி 06, 2013

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....



டோண்டு ராகவன்....

ஜனவரி மாதம்... எதிர்க்குரல் புத்தகம் வெளியீடு தொடர்பான பதிவு போட்டதும், அன்று மதியம் எனக்கு போன் வந்தது.. பேசியவர் டோண்டு ராகவன்,  அது தான் அவர் என்னிடம் பேசுவது முதல் முறை...

"நல்ல விஷயம் செஞ்சு இருக்கீங்க. வாழ்த்துக்கள்.. புத்தக கண்காட்சிக்கு போவீங்களா? நான் வருவேன், முடிந்தால் சந்திப்போம்" என்று கூறினார்.

ஆயிரம் தான் இஸ்லாத்திற்கு எதிராக கருத்து தெரிவிப்பவராக இருந்தாலும், புத்தகம் வெளியீடு என்று கேள்வி பட்டதும் போன் போட்டு வாழ்த்து சொல்லிய பண்பாளர்.

டோண்டு ராகவன் அவர்களின் மரணச்செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அன்று சந்தித்து இருக்கலாமே என்று இப்பொழுது தோன்றுகிறது.

எல்லாம் வல்ல இறைவன் அவர் குடும்பத்தாருக்கு இந்த பேரிழப்பை தாங்கிக் கொள்ளும் மனவலிமையை அளிப்பானாக.


                                                              

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

நாம் அனைவரும் இறைவனிடம் இருந்தே வந்தோம்... அவனிடமே திரும்பிச் செல்பவர்களாகவே இருக்கிறோம்...



நீங்கள் உறுதியாக கட்டப்பட்ட கோட்டையில் இருந்தாலும் உங்களை மரணம் வந்தடைந்தே தீரும்... (அல் குரான்)

12 கருத்துகள்:

  1. சலாம்,

    அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்...

    பதிலளிநீக்கு
  2. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

    //ஆயிரம் தான் இஸ்லாத்திற்கு எதிராக கருத்து தெரிவிப்பவராக இருந்தாலும், புத்தகம் வெளியீடு என்று கேள்வி பட்டதும் போன் போட்டு வாழ்த்து சொல்லிய பண்பாளர்.//

    இதுவரை அவரின் பதிவுகளும் கமென்ட்களும் படித்ததில்லை... ஆனால் அவ்வபோது பேசப்படுவதை வைத்து அவரின் கொள்கை தெரியும்...

    போனில் டோன்டு ராகவன் பேசியதாக அன்று சொன்னபோது அவர் மேல் மரியாதை வந்தது.... என்னதான் ஆயிரம் மாற்றுகருத்து வைத்திருந்தாலும் வலிய வந்து பாராட்டுவதற்கும் நல்ல மனம் வேண்டும்....

    அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரை சந்தித்து இருக்கலாம்.. உடல்நிலை சரி இல்லாமல் இருக்கிறார் என்று தெரியாது... இவ்வளவுக்கும் புத்தக கண்காட்சி எப்படி வருவீர்கள் என்று கேட்டேன்... நங்கநல்லூரில் இருந்து பஸ்ஸில் வருவேன் என்றார்... சோ இது போன்று யோசிக்க முடியாமல் போய்விட்டது...

      நீக்கு
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்...
    ஏகன், அவர் குடும்பத்திற்கு அமைதியையும், பொறுமையையும் தந்தருள்வானாக!

    பதிலளிநீக்கு
  4. தான் நம்பிய கொள்கையை மிக உறுதியாக கடைபிடித்தவர்.உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர்.தான் நினைப்பதை எந்த சமரசமில்லாமல் எழுதும் தைரியசாலி. அவரை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தினை தெரிவித்து கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. சலாம்,

    பிறக்கும் அனைத்து உயிர்களும் இறந்தே தீரும்...இதை மறந்து தான் நம்மிடையே சண்டைகளும் சச்சரவுகளும் ....! அவர் உயிரோடு இருக்கும் போது நம்மில் எத்தனை பேர் நமக்கிடையே பேசியிருப்போம்..இப்போது எத்துனை பதிவுகள் , இரங்கல்கள் ....இறந்த பின் காட்டும் அக்கறையால் யாருக்கு லாபம்...இருக்கும் போதே அனைவரும் இன்முகத்துடன் இருக்க பழகினால் பின் நம்மில் ஒருவரை இழக்கும் போது நம்முடைய தனிப்பட்ட செயலால் நாம் வருத்தம் அடைய தேவை இல்லை தானே ..!

    இப்போது ஒருதரப்பை சார்ந்த பெரியவர் ஒருவரை வசைபாடுவதாக பதிவு இடப்பட்டுவருகிறது !! எல்லோரும் மரணிக்க கூடியவர்கள் தானே ! பின் ஒரு நாள் வரும் போது எந்த முகத்துடன் வருத்தம் தெரிவிப்பார்கள்..தெரிவித்தாலும் அது பொருத்தமாய் இருக்குமா.? இதெல்லாம் நினைத்து பார்க்க ஒரு வாய்ப்பாய் இந்த தருணத்தை கொள்ள வேண்டும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்...!

    அன்னாருடைய மறைவுக்கு என்னுடைய வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் ..!

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

    பதிலளிநீக்கு
  6. அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்...

    பதிலளிநீக்கு
  7. எனது கண்ணீர் அஞ்சலி!

    அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

    பதிலளிநீக்கு
  8. வாங்க ஜெய்....

    ஜனவரில திடீர்னு போன் போட்டு பேசினார்... இப்ப மரணம்கிற நியூஸ் படிச்சதும் ஷாக்கா இருக்கு....

    பதிலளிநீக்கு
  9. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

    நாம் அனைவரும் இறைவனிடம் இருந்தே வந்தோம்... அவனிடமே திரும்பிச் செல்பவர்களாகவே இருக்கிறோம்...

    பதிலளிநீக்கு
  10. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

    நாம் அனைவரும் இறைவனிடம் இருந்தே வந்தோம்... அவனிடமே திரும்பிச் செல்பவர்களாகவே இருக்கிறோம்...

    பதிலளிநீக்கு
  11. வருகை புரிந்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றி..

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters