சனி, நவம்பர் 19, 2011

கழுதைக்கு வாக்கபட்டாலாவது உதையோட போகும்... நாம வாக்கபட்ருக்கது.....





                                                            
                                                                                                                 
ஏன் தமிழக மக்களே இப்படி செய்தீர்கள்? சென்ற தேர்தலில் நான் அ.தி.மு.க விற்கு வோட்டு போடவில்லை. நீங்கள் பெரும்பான்மையாக வாக்களித்ததால் தான் செல்வியின் ஆட்சி வந்தது. வாக்களித்த நீங்கள் கடிபடுவது நியாயமானது? தேவை இல்லாமல் அவரை ஆதரிக்காத நான் ஏன் கடிபடவேண்டும்?

என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்க இந்த அம்மா? கஜானவில காசு இல்லாட்டி, வரி போட்றதும், விலைவாசியை ஏத்துறதும்  தான் வழியா?  இத செய்றதுக்கு நீங்களும், படிச்ச அந்த பொடலங்கா IPS  ஆபிசர்களும் எதுக்கு? படிக்காத பாமரன்  கூட இந்த பட்ஜெட்டை போடுவாங்களே?  ஏன் நானே போடுவேனே? ஆட்சி செய்ய தெரியாட்டி ஊர பாத்திக்கிட்டு போங்கம்மா.

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு.


பொருள் ஈட்டுதல் என்பதில் தான் உங்கள் திறமை இருக்கு. அதில காட்டுங்க உங்க வேகத்த. வருமானத்திற்கு வழியா இல்லை?  நடைபெற்றுக்கொண்டு இருக்கும் எல்லா அரசு சார்ந்த திட்டங்களிலும்  10 %கமிசன் அடிச்சுகிட்டு  இருக்காங்கல்ல எல்லா MLA, மந்திரி , மாவட்டம், வட்டம்  மற்றும் அல்லக்கைகள்.  அது உங்களுக்கு தெரியாதா?  அவங்ககிட்ட போய் நிதிநிலை ரொம்ப கேவலமா இருக்கு , இந்த 5  வருஷம் மட்டும் ஊழல் பண்ணாதீங்கன்னு   சொல்லி,  அத நிறுத்த சொல்லுங்க, மொத்த செலவில 10 % சேமிக்கலாம், அதன் மூலம் பால் விலை மற்றும் பேருந்து கட்டணத்தை காலத்துக்கும் கட்டுக்குள்ள வச்சிருக்கலாம். தமிழகத்தில 40 % அளவுக்கு மின் திருட்டு அல்லது மின் இழப்பு மூலம் மின்சாரம் வீணாகிறது . மின் வாரிய ஊழியர்களையும் காவல் துறையையும் லஞ்சம் வாங்காம மனசாட்சியோட இந்த விசயத்தில வேலை செய்ய சொல்லுங்க. மின்சார கட்டணத்த அடுத்த 50 வருசத்துக்கு ஏத்தவேண்டியது இல்ல.

எனக்கே இத்தனை வழிகள் தோன்றும் பொழுது உங்களுக்கு தோன்றாமல் இருக்காது. ஆனா உங்களுக்கு உங்க கட்சிக்காரன் கொள்ள அடிக்கிறது நிற்கக் கூடாது, தனியார் பால் அதிபர்கள் கொடுக்கும் கோடிகள் உங்களுக்கு வேணும். ஆனால் அரசும் நடக்கணும்னா பக்கத்து மாநிலங்களுக்கு போய் கொள்ளை அடிச்சாத்தான் முடியும். அத வேணும்னாலும் செய்யுங்கள். எங்களை கொள்ளை அடிக்கிரத  மட்டும் விட்டுடுங்க.

அது சரி, இப்பவும்  இலவச திட்டங்கள் தொடருமா? இல்ல அதுக்கும் ஆப்பா? அப்படி தொடர்ந்தால், தயவு செய்து ஒரு பிஞ்ச செருப்பையும் இலவசமா குடுங்க. உங்கள்கிட்ட ஆட்சியை தந்ததுக்காக எங்கள நாங்களே செருப்பால அடிச்சிகிறோம். அத தவிர இந்த ஏழைகளால என்னதான் பண்ண முடியும்?

டிஸ்கி : கலைஞர் ஆட்சில இருக்கும் பொது கவுன்ட் டவுன் வச்ச அந்த புண்ணியவான்களே. இந்த ஆட்சிக்கும் ஏதாவது பண்ணுவீங்களா?  கவுன்ட் டவுன்லாம் வேணாம், நாலரை வருஷம் கொறஞ்சு வர்றதுக்குள்ள தமிழ் நாட்ல யாருமே இருக்க மாட்டாங்க, சுடுகாடுதான் இருக்கும். உடனே நடக்கிறமாதிரி ஏதாவது யோசிங்க.


Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters