சனி, மே 14, 2011

கலைஞருக்கு நன்றி... மிக்க நன்றி....


                                                                      

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட பெரும் தோல்வியால் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி இருப்பீர்கள். தோல்விக்கான காரணங்கள் என்ற பெயரில் உங்கள் மீது வீசப்படும் விமர்சனங்களால் கடும் மன உளைச்சலுக்கும் ஆளாகி இருப்பீர்கள்.

ஆனால் நான் உங்களை காயப்படுத்தப்போவதில்லை... உங்களுக்கு பல விதங்களில் நன்றி சொல்ல தமிழக மக்களாகிய நாங்கள் கடமைப் பட்டுள்ளோம்.

1 . ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு குடுத்ததற்க்காக, நிச்சயமாக இது ஏழைகளுக்கு உதவிய நல்ல திட்டம் என்பதில் மாற்று கருத்து இல்லை. இதற்க்காக உங்களுக்கு நன்றி.

2 . மத்திய அரசின் திட்டமாக இருந்தாலும், 108  இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தை திறமையாக செயல்படுத்தியதற்க்காக நன்றி.

3. இலவச காப்பீடு  திட்டத்தை 
செயல்படுத்தியதற்க்காக. நிச்சயமாக பல ஏழைகளின் உயிர் காப்பாற்றப்பட்டது என்பது உண்மை. இதற்க்காக உங்களுக்கு நன்றி.

4 . குக்கிராமங்களில் கூட ஓரளவு சாலை வசதி செய்து தந்ததற்கு நன்றி.

5 . வாக்களித்தபடி பெரும்பாலோருக்கு வண்ணத் தொலைக்காட்சி தந்ததற்கு நன்றி.

6 . சென்னையில் பல மேம்பாலங்களை கட்டி போக்குவரத்து நெரிசலை கணிசமாக குறைத்ததற்கு நன்றி.

7 . மின் அலுவலக நடவடிக்கைகளை முறைப்படுத்தியதற்க்காக. மின்வெட்டு அடிக்கடி நிகழ்ந்தது என்னவோ உண்மை, ஆனால்  சென்னையில் எந்த நேரம் போன் செய்தாலும் மின் அலுவலகங்களில் எடுத்து முறையான பதில் தந்தார்கள். அதற்க்காக நன்றி.

8 . ரேஷன் அலுவலகங்களில் கையூட்டு வாங்காமல் தேவையான மாற்றங்களை செய்து தந்தார்கள். அதற்க்காக நன்றி.

9 . மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கியதற்க்கு நன்றி.

10 . சிறுபான்மையினருக்கு இட
ஒதுக்கீடு அளித்ததற்கு நன்றி.

மேலும் பல நல்ல திட்டங்களை செயல் படுத்தியதற்க்காக நன்றி.

இவ்வளவு செய்தும் ஏன் தோல்வி அடைந்தோம் என்று சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள். பின்வரும் காரணங்களை களைய உடனடி நடவைக்கை எடுங்கள். எடுத்தால்... நிச்சயம் அடுத்த தேர்தலில் தி.மு.க ஆட்சியை மீண்டும் பிடிக்க முடியும்.





                                                           
                                              

1 . குடும்பத்தினரின் ஆதிக்கத்தை எல்லா மட்டங்களிலும் கட்டுப் படுத்துங்கள்.

2 . திரைத்துறையில், தயாரிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றில் இருந்து உங்கள் குடும்பத்தினரை விலகச் சொல்லுங்கள் அல்லது அடக்கி வாசிக்கச் சொல்லுங்கள். சினிமா மக்கள் அதிக முக்கியத்துவம் குடுத்து கவனிக்கும் ஊடகம். அதில் உங்கள் குடும்பத்தினரின் கடும் ஆதிக்கம் மக்களிடம் இயல்பான வெறுப்பை சம்பாதித்தது.

3 . ஏன் வியாபாரங்களில் இவ்வளவு போட்டி, யாருக்காக சம்பாதிக்கிறார்கள்? ஏற்கனவே 100  தலைமுறைக்கு சொத்து இருக்கிறது. இன்னும் ஏன் இவ்வளவு வெறி பணத்தின் மீது? இங்கு ஒரு தலைமுறையே சாப்பட்டிற்க்கும் சாதாரண வாழ்க்கைக்கும் போராடிக்கொண்டு இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

4 . நீங்கள் குடும்பத்தினரை சமாளிப்பதிலே அல்லது காப்பாற்றுவதில் போராடிக்கொண்டு இருக்கையில், பாரபட்சம் இல்லாமல் எல்லா அமைச்சர்களும்,       MLA-க்களும் புகுந்து விளையாடி விட்டார்கள். யாருக்கும் 10  கோடிக்கு கம்மி சொத்து இல்லை.

5 . இவை அனைத்தையும் மக்களுக்கு காசு கொடுத்து சமாளித்து விடலாம் என்று நினைத்தீர்கள். மக்களை காசு குடுத்து விளக்கி வாங்க முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இந்த குறைகளை சரி செய்தால் நிச்சயம் மீண்டும்  ஆட்சியை தி.மு.க வெல்லும். 


நம்பிக்கையோடு இருங்கள். மனம் தளர்ந்து விடாதீர்கள். சிறந்த இரண்டாவது எதிர்க்கட்சியாக ஜனநாயக் கடமையை ஆற்றுங்கள்.
மக்கள் நன்மதிப்பை மீட்டெடுக்க போராடுங்கள்.

மற்றபடி, உங்களுக்கு.... மீண்டும் நன்றி....மிக்க நன்றி....


19 கருத்துகள்:

  1. பகிர்ந்ததற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லாசனி, 14 மே, 2011

    அதே சமயம் பல்லாயிரம் கோடி ஊழல் செய்ததற்கும் குடும்ப ஆட்சி நடத்தியதற்கும் நன்றி! அதனால்தானே அம்மா முதல்வராக முடிந்தது!

    பதிலளிநீக்கு
  3. சூப்பர் அண்ணன்... KEEP IT UP ...

    பதிலளிநீக்கு
  4. கலைஞர் எதுவுமே பண்ண தேவையில்லை. ஜெயலலிதாவும், மன்னார்குடி கும்பலும் அடிக்கும் லூட்டியில் மக்களே அடுத்த முறை கலைஞர் பக்கம் திரும்பிடுவாங்க...

    பதிலளிநீக்கு
  5. @ஆர்.கே.சதீஷ்குமார்ஆட்சியை பிடிக்க ஜெயலலிதா ஏதும் பன்னால...கொடநாட்டில் படுத்துக்கொண்டு அறிக்கை விட்டதோடு சரின்னு ஒத்துக்கொண்ட சதீஷ் குமாருக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  6. அன்பின் சிராஜ் - சிந்தனை நன்று - நன்றி கூற வேண்டிய செயல்கள் தான் - இறுதியில் சிலவற்றை நிறுத்தச் சொன்னதும் சரிதான். இன்ஷா அல்லாஹ் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா.

    பதிலளிநீக்கு
  7. அன்பின் சகோ.சிராஜ்,
    மிக அழகிய முறையில் நிறை-குறைகளை பிரித்து 'நச்' என்று அருமையாக தொகுத்து அறிவித்துள்ளீர்கள். புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி. மிக்க நன்றி சகோ.சிராஜ்.
    அப்புறம், (உங்கள் சென்ற பதிவின் நாயகர்)திருநாவுக்கரசர் தோல்வி..!

    பதிலளிநீக்கு
  8. உங்கள் கூற்று அனைத்தும் உண்மை...

    http://zenguna.blogspot.com

    பதிலளிநீக்கு
  9. அம்மாவின் அட்டகாசங்கள் ஆரம்பம்..

    ௧. நேற்று ஜெயலலிதா எம் ஜி ஆர் சிலைக்கு மாலை அணிவிக்க வருகை தந்ததை ஒட்டி சென்னை அண்ணாசாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து நிறுத்தம்
    ௨. அதிக பொருட்செலவில் கட்டப்பட்ட புதிய சட்ட சபை புறக்கணிப்பு
    ௩. செம்மொழி நூலகம் அகற்றம்


    அதிமுக ஆட்சி இன்னும் 1 வருடத்தில் வெறுத்து போகும் மக்களுக்கு

    பதிலளிநீக்கு
  10. பிழைத்துக் கிடந்தால் பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  11. என் அனுபவம்:
    - சென்னையிலும் குண்டும் குழியுமான விபத்தை ஏற்படுத்தும் சாலைகளே.
    - தி.நகர், கோட்டூர் புறம், அடையார் எல்.பி. சாலை மேம்பாலங்களால் பயனை விட பாதிப்பே அதிகம்.
    - மின் வாரிய போனில் பல முறை பொறுப்பற்ற பதில்களே கிடைத்தன.
    - ரேஷன் கார்ட் மாற்ற லஞ்சம் கட்டாயம்

    பதிலளிநீக்கு
  12. சதிஸ்குமார் அண்ணன் கருத்துத் தான் என் கருத்தும்...

    பதிலளிநீக்கு
  13. @pvr
    நான் எனது ஊரில் இருந்து சென்னைக்கு ரேஷன் கார்டை மாற்றினேன், தாம்பரத்தில் தான் மாற்றத்திற்கு குடுத்தேன். அப்பொழுது யாரும் என்னிடம் பணம் கேட்கவில்லை. அதன் பின் எனது மகள் பெயரை சேர்க்க சோளிங்கநல்லூர் அலுவலகத்தில் குடுத்தேன், அப்பொழுதும் என்னிடம் யாரும் பணம் கேட்கவில்லை. ஒரு வேலை சில இடங்களில் வாங்கும் பழக்கம் இருக்கலாம், நீங்கள் சொல்வது போல.

    பதிலளிநீக்கு
  14. கலக்குறே சந்துரு .................

    பாரேன் இந்த பயலுக்குலேயும் என்னமோ இருந்திருக்கு ...
    ச்சே என்னமா தின்க் பண்ணிருக்கான் ..............................

    பதிலளிநீக்கு
  15. கலைஞர் கருணாநிதி செய்த கடைசி தவறு
    தனி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் கூட போட்டி போடாத நிலையில் தனது கட்சியின் வலிமையினை தானே மதிக்காமல் போனது,

    கடந்த கால ஆட்சியில் இனாம் கொடுத்த பழக்கம் தொகுதி பங்கீட்டிலும் தொடர கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் மத்தியில் வெறுப்பினை உண்டாகியது .அதனால் தி.மு .க தொகுதி கிடைக்காதவர்கள் தி.மு .க கூட்டு கட்சிக்கு வோட்டு போடவில்லை.

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களின் ஒற்றுமை அனவருக்கும் தெரியும். தலைமை வழிதான் தொண்டர்களின் வழி . ஒருவழியாக தானும் தோற்று தி.மு .க.வையும் தோல்வியடைய வழி செய்து விட்டனர் .

    ஜாதி அமைப்பு கூடாது என்று முற்போக்கு கொள்கை பேசும் கொள்கைக்கு குழி தோண்டி ஜாதி கட்சிகளுக்கு தொகுதி கொடுத்து தானே குழி தோண்டி தி.மு .க. வை புதைக்க வழி செய்து விட்டார்.
    குடும்ப வாரிசுகளுக்கு அனைவருக்கும் முக்கிய பதவி கொடுத்து மற்றவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்ற எண்ணம் உண்டாகும்படி செய்த நிலை.

    தமக்கு வயதாகிவிட்டது என்ற காரணத்தால் அனைவரையும் அரவணைத்து செல்ல நாட்டம் கொண்டு தவறு செய்பவர்களை கண்டு கொள்ளாமல் போனது. இனாம் கொடுத்தால் வாக்குச் சீட்டு வந்து விழும் என்ற தவறான கொள்கைக்கு அடிமையானது.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters